Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னாரிலுள்ள சில வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்கச் செல்லும் பெண்களிடம் அவர்களின் காணமல்போன கணவனின் மரணச் சான்றுதலை வங்கி முகாமைத்துவம் கேட்பதாக பாதிக்கப்பட்ட பெண்கள் மன்னார் பிரஜைகள் குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக மன்னார் பிரதேச சபையின் முன்னாள் உப தலைவரும் மன்னார் பிரஜைகள் குழுவின் முக்கியஸ்தருமான அந்தோனி சகாயம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் யுத்தத்துக்கு முன்னரும் பின்னரும் பலர் கடத்தப்பட்டுள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் பலர் குடும்பத்தலைவர்களாகவும் உள்ளனர்.
இந்நிலையில் குறித்த குடும்பத்தலைவர்கள் கடத்தப்படுவதற்கு அல்லது காணாமல் போவதற்கு முன்னர் தமது குடும்ப தேவைகளுக்காக மனைவி அல்லது பிள்ளைகளின் நகைகளை வங்கிகளில் அடகு வைத்து பணத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இவர்களில் பலர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். தமது கணவர் அடகு வைத்த நகைகளை மீட்கும் பணியில் காணாமல் போன குடும்பத்தலைவர்களின் மனைவிகள் ஈடுபட்டு வந்தனர். குறித்த நகைகளை மீட்பதற்கு பெண்கள் கட்டம் கட்டமாக வங்கிக்கு பணத்தை செலுத்தி இறுதியாக நகைகளைக் கேட்டால், வங்கிகளின் முகாமைத்துவம் காணாமல் போன கணவனின் மரணச்சான்றுதலை கேட்டுள்ளது. இது அவர்களுக்கு மிகவும் துயரத்தை ஏற்படுத்துகின்றது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பல பெண்கள் மன்னார் பிரஜைகள் குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago