2025 மே 05, திங்கட்கிழமை

நடுக்காட்டில் கரடிகளிடம் சிக்கிய குடும்பஸ்தர்

Freelancer   / 2022 ஜூன் 18 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - கொக்காவில் காட்டு பகுதியில் கரடிகளின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(17) பிற்பகல் 4.30 மணியளவில் கொக்காவில் காட்டு பகுதியில் உள்ள பெண்கள் இராணுவ முகாமிற்கு பின் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் முறிகண்டி பகுதியைச் சேர்த்த 38 வயதுடைய சிவபாலகிருஸ்ணன் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விறகு வெட்ட சென்றவரையே இவ்வாறு இரண்டு கரடிகள் தாக்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அவசர சிகிச்சையின் பின்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X