2025 மே 05, திங்கட்கிழமை

நோயாளர் காவு வண்டிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை

Freelancer   / 2022 ஜூன் 30 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய சுகாதார அமைச்சினால் 46 பென்ஸ் மற்றும் போட் ரக நோயாளர் காவு வண்டிகள் வடமாகாணத்திற்கு வழங்கப்பட்டிருந்தன. இவற்றிற்கு உற்பத்தியாளர்களால் வழங்கப்பட்ட உத்தரவாதத்தின் படி சுப்பர் டீசல் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இவற்றிற்கான சுப்பர் டீசலைப்பெறுவதில் கடுமையான சிரமங்களை சுகாதார திணைக்களம் எதிர்கொண்டுள்ளது.

இதனால் சில மாவட்டங்களில் குறித்த நோயாளர் காவுவண்டிகள் தற்காலிகமாக பாவனையில் இருந்து விலக்கப்பட்ட நிலையில் இருப்பதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட சுகாதார பணிப்பாளர் தமது மாவட்ட அரச அதிபர் ஊடாக சுப்பர் டீசலினைப் பெறுவதற்கு விசேட பொறிமுறையினை ஏற்படுத்தியுள்ளார். அதனால் முல்லைத்தீவில் சுப்பர் டீசலில் இயங்கும் நோயாளர் காவு வண்டிகள் தொடர்ந்து பாவனையில் உள்ளன.

இருப்பினும் கிளிநொச்சி மாவட்டத்தில் பிராந்திய சுகாதாரப் பிரிவினர் சுப்பர் டீசலில் இயக்க வேண்டிய நோயாளர் காவு வண்டிகளை சாதாரண டீசலில் இயக்கும் முடிவினை தன்னிச்சையாக எடுத்துள்ளனர்.

இதனால் குறித்த நோயாளர் காவு வண்டிகளின் நீடித்த இயங்கு நிலை பாதிக்கப்படும் சூழ் நிலை உருவாகியுள்ளது. 

இதனால் பெறுமதிவாய்ந்த நோயாளர் காவுவண்டிகள் செயலிழக்கும் அபாயத்தினை
எதிர்நோக்கியுள்ளதாக சுகாதாரப் பணியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X