Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
தமிழர் தாயகத்தைச் சிங்கள பௌத்த மயமாக்கும் நோக்குடன் இராணுவப் பலத்துடன் இடம்பெற்று வரும் தமிழர் தாயக அபகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு சர்வதேச நீதியை வலியுறுத்தியும் ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி ஐ.நா.செயலகம் வரை இடம்பெறவுள்ள நீதிக்கான போராட்டத்துக்கு பூரண ஆதரவை வழங்கிக் கலந்துகொள்ளவுள்ளதாக கிளிநொச்சி மாவட்டப் பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் களிநொச்சி மாவட்டச் செயலகமான அறிவகத்தில் இடம்பெற்ற இது தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்ட கிளிநொச்சி மாவட்டப் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள நடை பயணத்துக்கு தாம் பூரண ஆதரவை வழங்கிக் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவித்தனர்.
இக்கலந்துரையாடலில் வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் அ.வேழமாலிகிதன், கிளிநொச்சி மாவட்ட கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசத் தலைவர் க.ஜெயக்குமார், மற்றும் கிளிநொச்சி மாவட்ட இந்து இளைஞர் பேரவை, கிளிநொச்சி இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பெரும்பாலான பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago