2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பத்மநாபாவின் 65ஆவது பிறந்த தினம்

Menaka Mookandi   / 2016 நவம்பர் 20 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஸ்தாபக தலைவர் கந்தசாமி பத்மநாபாவின் 65ஆவது பிறந்த தினம், நேற்று முன்தினம் சனிக்கிழமையன்று (19), மன்னாரில் அனுஸ்டிக்கப்பட்டது.

ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் மன்னார் மாவட்ட தலைமைக் காரியாலயத்தில், மத்திய குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் தலைமையில்ஈ இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதில், வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், டெலோ அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் பற்றிக் வினோ, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், மத்திய குழு உறுப்பினர்களான ஜூட் குரூஸ், பீட்டர் மடுத்தீன், நானாட்டான் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் றீகன், மாவட்டக் குழு உறுப்பினர்கள், கட்சியின் தோழர்கள் என, பலர் கலந்துகொண்டு, பத்மநாபாவின் உருவப்படத்துக்கு மலர் மாலை அனுவித்து, அஞ்சலி செலுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .