Freelancer / 2022 நவம்பர் 11 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி - கண்டாவலை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட விளாவேடை கிராமத்தில் வசிக்கின்ற மக்கள் மழை காரணமாக போக்குவரத்து மேற்கொள்வதில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
குறித்த கிராம மக்கள் பயன்படுத்துகின்ற பிரதான பாதையில் உள்ள பாதுகாப்பற்ற பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதால் பாடசாலை மாணவர்கள், கிராம மக்கள், மற்றும் அப் பகுதியில் விவசாய நிலங்களுக்குச் செல்லும் விவசாயிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் போக்குவரத்து மேற்கொள்வதில் இடர்களை சந்தித்து வருகின்றனர்.
தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமானால் இக்
கிராம மக்களின் போக்குவரத்து முற்றாக பாதிப்படையலாம் என தெரிவிக்கப்படுகிறது. R
9 minute ago
13 minute ago
22 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
22 minute ago
28 minute ago