2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை

George   / 2016 ஓகஸ்ட் 31 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

'முல்லைத்தீவு நகர பஸ் நிலையம் 2017ஆம் ஆண்டு அமைக்கப்படவுள்ளது' என முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு நகருக்கான பஸ் நிலையம் இதுவரை அமைக்கப்படாத நிலையில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பஸ்கள் தற்காலிக இடங்களில் தரித்து நிற்கின்றன. இதனால், பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக பஸ் நிலையம் இன்மையால் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லாத நிலை காணப்படுகின்றன.

இந்நிலையில், முல்லைத்தீவு நகருக்கான பஸ் நிலையம் அமைக்கப்படாமை தொடர்பாக மாவட்ட செயலாளர் கருத்துக்கூறுகையில்,

'முல்லைத்தீவு நகருக்கான பஸ் நிலையம் இதுவரை அமைக்கப்படவில்லை. அதனை அமைப்பதுக்கு இந்த வருடத்தில் எந்தவித நிதி ஒருக்கீடுகளும் இல்லை. அடுத்;த வருடத்தில் இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கான நிதி கிடைக்கும் போது, அடுத்த ஆண்டில் பஸ் நிலையம் அமைக்கப்படும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .