2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பஸ் விபத்தில் ஒருவர் பலி: 17 பேர் காயம்

George   / 2016 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், எஸ்.என்.நிபோஜன்

மன்னார், மடு பிரதேசத்திலிருந்து முழங்காவில் ஊடாக, யாழ்ப்பாணம் சென்ற பஸ் ஒன்று, திங்கட்கிழமை விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 17பேர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம், மடத்தடியைச் சேர்ந்த புகனேந்திரன் அன்னரத்தினம் (வயது 65) என்பவரே உயிரிழந்தவராவார்.

பூநகரி, மண்டைக்கள்ளாறு, நாளாவெளி பகுதியினூடாகப் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி பஸ், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மடு திருத்தலத்தலத்துக்கு யாத்திரை சென்று திரும்பியவர்களே, விபத்தில் சிக்கியுள்ளனர். காயமடைந்தவர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .