2025 மே 21, புதன்கிழமை

பாடசாலை அலுவலகம் தீக்கிரை

Editorial   / 2019 செப்டெம்பர் 13 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்   

 

கிளிநொச்சி - கோணாவில் மகா வித்தியாலயத்தின் அதிபர் அலுவலகத்துக்கு  விசமிகளால் தீ வைக்கப்பட்டு அனைத்து  ஆவணங்களும் எரிக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் இன்று (13) அதிகாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இன்று காலை  6.30 க.பொ.த சதாரண தர மாணவர்களுக்கு இடம்பெறுகின்ற விசேட வகுப்புக்கு மாணவர்கள் பாடசாலைக்கு சென்ற போது, அதிபர் அலுவலகத்திற்குள்லிருந்து புகை வெளியேறுவதனை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து, மாணவர்கள் உடனடியாக வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என   ஒன்றுசேர்ந்து தீயை அணைத்து  பாதுகாக்க கூடிய  ஆவணங்கள் மற்றும் பொருள்களை பாதுகாத்துள்ளனர்.

அதிபர் அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டுள்ளது. எனவே கதவினை உடைத்து  உள்ளே சென்ற விசமிகள் மண்ணெண்ய் ஊற்றி தீ வைத்திருக்கலாம் என  பொலீஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மண்ணெண்ய் மணம் வீசுவதோடு தீப்பெட்டி ஒன்றும்  அலுவலகத்துக்குள் காணப்பட்டுள்ளது.

இந்த தீ காரணமாக, பாடசாலை மாணவர்களின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், பரீட்சை பெறுபேறு ஆவணங்கள், ஆசியர்கள் தனிப்பட்ட விடயங்கள் அடங்கிய கோவைகள், மாணவர்களின் வரவு பத்திரங்கள் என அனைத்து ஆவணங்களும் எரிந்து அழிந்துள்ளன.

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர், கரைச்சிக் கோட்டக் கல்வி அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X