Freelancer / 2022 ஜூலை 04 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா, 4ஆம் கட்டை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒன்லைன் பதிவு நடவடிக்கையை ஒழுங்குபடுத்தி மேற்கொண்ட பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா, 4ம் கட்டை ஐஓசி நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் விநியோகம் கடந்த இரு தினங்களாக இடம்பெற்றது.
இதன்போது நபரொருவர் தனது மோட்டர் சைக்கிளுக்கு பெற்றோல் நிரப்ப வந்த போது அவர் நேற்றைய தினம் இங்கு எரிபொருள் நிரப்பியதாக தெரிவித்து அங்கு கடமையில் இருந்த பிரதேச செயலக உத்தியோகத்தர் திருப்பி அனுப்பியிருந்தார்.
இதனையடுத்து, கடமை முடிந்து குறித்த உத்தியோகத்தர் எரிபொருள் நிரப்பு நிலையத்தை விட்டு தனது மோட்டர் சைக்கிளில் வெளியேறிய போது அவ் உத்தியோகத்தரை முற்றுகையிட்ட சிலர் அவரை தகாத வார்த்தையால் பேசி தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தனர்.
இதன்போது குறித்த உத்தியோகத்தர் அவர்களிடம் இருந்து தப்பிச் சென்றிருந்தார். (R)
9 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Jan 2026
21 Jan 2026