Freelancer / 2023 ஏப்ரல் 12 , பி.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் நடனமிட்டான் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள குளத்தில் இன்று குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
03 ஆம் ஒழுங்கை வள்ளிபுனம் பகுதியினை சேர்ந்த 50 வயதுடைய டா.டேவிட் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
குளத்தின் கரையில் இவரின் மிதிவண்டி மற்றும் செருப்பு, சாரம் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஹேரத் குளத்தில் இறங்கி சடலத்தினை மீட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .