2025 மே 05, திங்கட்கிழமை

புதுக்குடியிருப்பில் பேரணி

Freelancer   / 2022 ஜூலை 08 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி உட்பட உணவுப் பற்றாக்குறை, மருந்து நெருக்கடி எனப் பல்வேறு விடயங்களை வெளிப்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இன்று நடைபெற்றது. 

புதுக்குடியிருப்பு அம்மன் கோவிலில் இருந்து இப்பேரணி முதன்மை வீதி வழியாக நகர்ந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினை சென்றடைந்தது.  

இந்த பேரணியில் எரிபொருள் கிடைக்க வேண்டும், உணவு, மருந்துகள் கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இப்பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனும் கலந்து கொண்டிருந்தார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X