Editorial / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி – பூநகரி பிரதேசத்தில், சுமார் 6,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு உவர் நிலங்களாக மாறியிருப்பதாக, விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
பூநகரிப பிஜரதேசத்தில், குடிநீர் பிரச்சினை ஒரு பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது. கூடுதலான பயிர்ச்செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியமையே, குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதெனவும், விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
பூநகரிப் பிரதேசத்தில், கடந்த 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாகவும் அதன் பின்னர் உவர் நீர்த் தடுப்பணைகள் பராமரிக்கப்படாமலும் கைவிடப்பட்டமையால் பூநகரிப் பிரதேசத்தைச் சூழவுள்ள உவர் நீர்த்தடுப்பணைகள் அழிவடைந்தன.
பூநகரிப் பிரதேசத்தில் ஆங்காங்கே காணப்படுகின்ற சிறுகுளங்களைப் புனரமைத்து மழை நீரைத்தேக்குவதன் மூலம், நிலங்களின் உவர்த்தன்மையைப் போக்கி விவசாய நடவடிக்கையில் ஈடுபடமுடியுமென்றும், விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
11 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago