Editorial / 2020 மார்ச் 17 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா – பம்பைமடு, பெரியகட்டு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை தடுப்பு முகாமுக்கு, நேற்று மாலை 4.45 மணியளவில், மேலும் 46 விமான பயணிகள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு வரும் இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டவர்கள் 14 நாள்கள் தடுத்து வைத்து கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றும் வவுனியா தடுப்பு முகாமுக்கு 02 பஸ்களில் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் வெளிநாட்டில் இருந்து வருகைதந்த விமான பயணிகள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இதேபோன்று, மார்ச் 13ஆம் திகதியன்று, வவுனியா - பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள தடுப்பு முகாமுக்கு 5 பஸ்களில் 265 வெளிநாட்டு விமான பயணிகள் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
18 minute ago
25 minute ago
31 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
25 minute ago
31 minute ago
31 minute ago