2025 மே 05, திங்கட்கிழமை

பெற்றோல் தேடி வாகனத்தில் வந்த மோட்டார் சைக்கிள்கள்

Freelancer   / 2022 ஜூலை 12 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முள்ளியவளை லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று, முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு, கிராம அலுவலகரின் பதிவின் கீழ் டோக்கன் அடிப்படையில் பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.

இந்த பெற்றோலினை பெற்றுக்கொள்ள சில பிரதேசங்கள் பத்து கிலோமீற்றருக்கும் தூரமாக காணப்படுவதால், வாகனம் ஒன்றில் நான்கு மோட்டார் சைக்கிள்களை ஏற்றிவந்து பெற்றோல் அடித்துள்ள காட்சி பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசஉத்தியோகத்தர்கள் மற்றும் வங்கிகளில் பணியாற்றுபவர்கள் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபரின் அனுமதியுன்  எரிபொருள் வழங்கப்பபட்டு வருகின்றது.(R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X