2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

’மன்னாரிலிருந்து தமிழ்நாட்டுக்கு கப்பல்சேவை’

Editorial   / 2019 பெப்ரவரி 16 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைமன்னாரிலிருந்து தமிழ்நாட்டுக்குக் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மன்னார், யாழ்ப்பாண மாவட்டங்கள், ஒரு சுற்றுலா மய்யமாக அமையவுள்ளமையால், தலைமன்னார், காங்கேசன்துறையிலிருந்து, தமிழ்நாட்டுக்கு கப்பல் சேவை ஆரம்பிக்கவுள்ளதாகவும்  இது தொடர்பாக, இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்தை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதனூடாக, மன்னார், வவுனியா, திருகோணமலை ஆகிய நகரங்களை அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X