Editorial / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில் இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்று, மூன்று மாதம் நிறைவடைந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 3ஆவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை, மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில், இன்று (01) தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஜூலை, ஓகஸ்ட் மாதங்களில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டொஸ்களையும் பெற்றகொண்ட மூத்த பிரஜைகளுக்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளே, மேற்படி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில், இராணுவத்தினர், விமானப் படையினர் மற்றும் சுகாதார ஊழியர்களின் ஒத்துழைப்புடன் அதிகளவானவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசிகளைப் பெற்று வருகின்றனர்.
எதிர் வரும் வாரம் வரை குறித்த தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
18 minute ago
22 minute ago
36 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
36 minute ago
45 minute ago