2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் விசேட போக்குவரத்து

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மன்னார் மாவட்டத் தனியார் போக்குவரத்து சங்கத்தால் விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் ரீ.ரமேஸ் தெரிவித்தார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் சாலை ஊழியர்களால் திங்கட்கிழமை (16) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்பகிஷ்கரப்புப் போராட்டம் தொடரும் நிலையிலேயே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மன்னாரில் இருந்து தோட்டவெளி, கரிசல், புதுக்குடியிருப்பு உள்ளிட்ட கிரமங்களுக்கான சேவைகள், தற்பொது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், மக்கள் கோரும் இடங்களுக்கு உடனடி போக்குவரத்து சேவையை ஆரம்பிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X