Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
George / 2017 ஜனவரி 06 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னாரில் ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனை மற்றும் ஹெரோய்ன் போதைப்பொருளை தன் வசம் வைத்திருந்த என்ற குற்றச்சாட்டின் பெண் ஒருவர் உட்பட இருவரை புதன் கிழமை (4) கைது செய்துள்ளதாக மன்னார் மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.
மன்னார் மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் மன்னார் மூர்வீதி மற்றும் உப்புக்குளம் பகுதியில் வைத்து குறித்த இரு நபர்களையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் 110 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளும், மற்றைய நபரிம் 60 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளும் மீட்கப்பபட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், மன்னார் மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
19 minute ago
29 minute ago