Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 மார்ச் 27 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா, தவசிக்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச்சென்ற முதிரை மரக்குற்றிகளை மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினரால் (எஸ்.டி.எப்) மடக்கிப்பிடிக்கப்பட்டு நெளுக்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்வமானது நேற்று (26) அதிகாலை இடம்பெற்றதாக வவுனியா நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இரகசிய தகவலின் அடிப்படையில் மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினரால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மேலும், இக்கடத்தலில் ஈடுபட்ட ஒமந்தை, கூமாங்குளம், தோணிக்கல் பகுதியை சேர்ந்த மூவரை கைது செய்ததுடன் கடத்தலுக்குப் பயன்படுத்திய கப் ரக வாகனம் மற்றும் 10 முதிரை மரக்குற்றிகளையும் கைப்பற்றி நெளுக்குளம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்பவம், தொடர்பான மேலதிக விசாரணையினை நெளுக்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
12 minute ago
19 minute ago
26 minute ago