Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2022 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
க அகரன்
வவுனியா, செக்கட்டிபுலவு பாடசாலையில் கல்வி கற்கும் இராசேந்திரன் கிருபன் (வயது 15) என்ற மாணவனை ஓகஸ்ட் 16 முதல் காணவில்லை என பூவரசங்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி மாணவன் 16 திகதி அதிகாலை 1 மணியளவில் நித்திரையால் எழுந்து தண்ணீர் அருந்தியதாகவும் அதுவரை வீட்டில் இருந்ததை அவதானித்ததாகவும் 16 ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் எழுந்து பார்த்தபோது மகன் காணாமல் போயுள்ளதாகவும் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் தாயார் முறைப்பாடு செய்துள்ளார் என காணாமல் போன மாணவனின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவன் வகுப்பிற்கு போகாததனால் அவரை தயார் 15ஆம் திகதி கண்டித்திருந்தார். அதனாலேயே குறித்த மாணவன் காணாமல் போயிருப்பார் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. எனினும்
இவ்விடயம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவரை, யாராவது அடையாளம் கண்டால் 0766922218, 0779987491 என்ற அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் மாணவனின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago