2025 மே 05, திங்கட்கிழமை

மாணவர்களின் வருகை வெகுவாக குறைவு

Freelancer   / 2022 ஜூன் 20 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியாவில் உள்ள நகர்ப்புற பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.

எரிபொருள் நெருக்கடியால் பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைத்து வருவதில் பெற்றோருக்கும், பொது போக்குவரத்து சேவையினருக்கும் ஏற்பட்ட இடையூறின் காரணமாகவே மாணவர்களின் வரவு குறைந்துள்ளது.

இதேவேளை ஆசிரியர்களின் வரவும் குறைந்து காணப்பட்ட நிலையில் வினாத்தாள் திருத்தும் பணிகளுக்கு செல்லும் ஆசிரியர்களும் கடும் பிரயத்தனம் மேற்கொண்டே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

இதேவேளை கடமைக்கு செல்லும் அரச ஊழியர்களும் பொதுப்போக்குவரத்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டிருந்தது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X