Freelancer / 2024 பெப்ரவரி 13 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
தவறான முடிவை எடுத்து தன்னுயிரை மாய்த்துக்கொண்ட பாடசாலை மாணவி சடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு - இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 வயதுடைய மாணவியான நிதர்சினி என்பவரே இவ்வாறு தவறான முடிவினை எடுத்துள்ளார்.
வீட்டில் பெற்றோர்கள், உறவினர்கள் இல்லாத நிலையில் குறித்த மாணவி தனது அறைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து பிரதேசவாசிகள், அயலவர்கள் இணைந்து குறித்த மாணவியினை மீட்டு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும், அவர் உயிரிழந்து விட்டதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இவரது சடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள். R
26 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
3 hours ago