Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 ஜனவரி 18 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியை தனிநபரிடமிருந்து இராணுவத்துக்கு சுவீகரிப்பதற்கான நில அளவீட்டு பணி வியாழக்கிழமை (18) இடம்பெறவிருந்த நிலையில் குறித்த அளவீட்டு பணிகள் பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு நில அளவை திணைக்கள அதிகாரிகள் நில அளவீட்டு பணிக்காக துயிலும் இல்ல காணிக்கு சென்றபோது அங்கு கூடிய மக்கள் இந்த இடத்தில் நாம் எமது உறவுகளை புதைத்துள்ளோம். இந்த காணியை அளவிட அனுமதிக்க மாட்டோம் என்றதன் அடிப்படையில் அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
குறித்த இடத்தில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்ப்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் மக்களுடன் இணைந்திருந்தனர்.
9 minute ago
13 minute ago
19 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
19 minute ago
39 minute ago