2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மீன் பிடித்தவ​ர் சடலமாக மீட்பு

Editorial   / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - உளுக்குளம் பகுதியில், குளத்துக்கு மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர், இன்று (19) அதிகாலை 4.30 மணியளவில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், 3 பிள்ளைகளின் தந்தையான ஜி.விஜயசிறி (வயது 57) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மீன் பிடிப்பதற்குச் சென்ற குறித்த நபர், நீண்ட நேரமாக வீடு திரும்பாததை அடுத்து, கிராம மக்கள் அவரைத் தேடியுள்ளனர். இதன்போது, உளுக்குளம் குளத்தில் அவர் சடலமாக மிதந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .