2025 ஜூலை 09, புதன்கிழமை

மீள்குடியேறிய குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டங்கள் இல்லை

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஒக்டோபர் 19 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோரக் கிராமங்களில் ஒன்றாகக் காணப்படும் கருநாட்டுக்கேணி கிராமத்தில் சுமார் 124 வரையான குடும்பங்களுக்கு இதுவரை வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படாத நிலையில் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கருநாட்டுக்கேணி பகுதியில், யுத்தம் காரணமாக 1984ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட மக்கள் யுத்தத்தின் பின்னராக மீள்குடியேற்றப்பட்டதையடுத்து, இதுவரை 215 வரையான குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன. இவ்வாறு மீள்குடியேறிய குடும்பங்களில், 124 வரையான குடும்பங்கள் இதுவரை வீட்டுத் திட்டங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் வாழ்ந்து வருகின்றன.

43 வரையான குடும்பங்களின் வீடுகளுக்கான, பகுதி திருத்த வேலைக்கான கொடுப்பனவுகளும் இதுவரை வழங்கப்படவில்லை. இதுவரை 91 வரையான குடும்பங்களுக்கு மாத்திரமே வீடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், சுமார் 104 வரையான குடும்பங்கள் மின்சார வசதிகள் இன்றியும் வாழ்ந்து வருகின்றன.

எனவே, வீடுகள் இன்றி வாழும் குடும்பங்கள் தமக்கான வீட்டுத் திட்டங்கள் மற்றும் மின்சார வசதி என்பவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .