Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 நவம்பர் 09 , பி.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சுகாதார துறையின் பல்வேறு தொழிற்சங்கங்கள், இன்று (09), பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டன.
மருத்துவ ஆய்வக இராசாயனவியலாளர்கள், தாதியர்கள், மருந்தாளர்கள், கண் பரிசோதகர்கள், குடும்ப நலத் தாதியர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட 15 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் இந்த அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டன.
சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படாமை, தொழில்சார் பட்டப்படிப்பு பதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்காமை, சுகாதார நிர்வாக சேவையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகாமாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் வைத்தியசாலைகளிலும் சுகாதார ஊழியர்களும், பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago