Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 நவம்பர் 10 , பி.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ. கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக,குளங்களின் நீர்மட்டங்கள் அதிகரித்துள்ளன.
இதனால்,நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 20 குளங்களில் 03 குளங்கள் வான்பாய்கின்றன.
முத்தையன்கட்டு நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள 8 குளங்களில் 14 அடி 02 அங்குலம் கொள்ளவு கொண்ட மருதங்குளம் 14 அடி 10 அங்குலமாக வான் பாய்கின்றன.
வவுனிக்குளம் நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள 12 குளங்களில் 09 அடி 06 அங்குலம் கொள்ளவு கொண்ட பழையமுறுகண்டிகுளம் 09 அடி 08 அங்குலமாக வான் பாய்கின்றது.
09 அடி 06 அங்குலம் கொள்ளவு கொண்ட கோட்டைகட்டியகுளம் 09 அடி 09 அங்குலமாக வான் பாய்கின்றது.
மாவட்டத்தில் ஏனைய குளங்களின் நீர்மட்டங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளதுடன், வான்பாயும் குளங்களின் கீழ் எதுவித பாதிப்புகளும் இதுவரை பதிவாகவில்லை என, மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago