2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

முல்லைத்தீவு கடலில் இந்திய இழுவை படகுகள்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு கடலில் கடந்த இரண்டு நாட்களாக இந்திய இழுவைப்படகுகள் தொடர்ச்சியாக காணப்படுகின்றன. 

இவற்றை கட்டுப்படுத்த கடற்படையினர் மற்றும் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம் கடற்தொழில் அமைச்சிற்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளார்  சங்கங்களின் சம்மேளன  தலைவர்  வி.அருள்நாதன் அவர்களினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் இல்லாத நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடந்த மூன்று மாதங்களாக கடலுக்கு செல்லமுடியாத நிலையில், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக  அரச திணைக்களங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இலங்கை கடல் வளத்தினை இந்திய மீனவர்கள் சுறண்டிச் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையில் கடற்படையினர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் மற்றும் திணைக்கள அதிகாரிகளுக்கு  தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் முல்லைத்தீவு கடலில் ஆக்கிரமித்து நிக்கும் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X