2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

முள்ளியவளையில் மீண்டும் பதற்றம்

Freelancer   / 2022 ஜூன் 24 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சுகாதார பிரிவு வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு வழங்குவதற்காக  6,600 லீற்றர் எரிபொருள் நேற்று (23) கிடைக்கப்பெற்றுள்ளது.

எனினும், கடந்த சில நாட்களாக மக்கள் நீண்ட வரிசையில் நின்ற காரணத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மக்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்ட போதும், ஏனைய மக்களுக்கு வழங்கப்படவில்லை.

இதன் காரணத்தினால், “பெற்றோலை மக்களுக்கு வழங்குங்கள்” எனக் கோரி வீதியினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர், படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று (24) சுகாதார பிரிவினருக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்ட எரிபொருளினை மக்களுக்கு வழங்க மாவட்ட அரசாங்க அதிபருடன் தொலைபேசியில் கலந்துரையாடிய எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .