2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

George   / 2016 நவம்பர் 26 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள், வியாழக்கிழமை (24) இரவு  இனம் தெரியாத நபர்களால்  திணைக்கள வளாகத்தில் வைத்து தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது என முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, முல்லைத்தீவு கடற்கரை வீதியில் உள்ள கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவரின் மோட்டார்  சைக்கிளை அலுவலக வளாகத்தில் நிறுத்திவிட்டு விடுதியில் அவர் தங்கி இருந்த வேளையில், நள்ளிரவில் வந்த இனம்தெரியாத நபர்கள் காவோலைகளை  மோட்டார் சைக்கிளின் மேல் போட்டு தீவைத்துவிட்டு  தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் திணைக்கள அதிகாரிகளால் முல்லைத்தீவு விசேட குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டதை  தொடர்ந்து விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அண்மைக்காலமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்கிளாய், நாயாறு போன்ற பிரதேசங்களில் உள்ள களப்புக்களில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி உபகரணங்களோடு கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையில் முல்லை மாவட்ட நீரியல்வள திணைக்களத்தின்  அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .