2025 ஜூலை 09, புதன்கிழமை

மூளைக் காய்ச்சலால் 5 வயது குழந்தை உயிரிழப்பு

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார்

மூளைக் காய்ச்சலால் 5 வயது குழந்தையொன்று, ஞாயிற்றுக்கிழமை மாலை (18) உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி பாரதிபுரத்தை சேர்ந்த விஜயராஜ் விஸ்னுஜன் என்ற குழந்தையே இவ்வாறு மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது.

சில நாட்களாக காய்ச்சல் மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்ட குழந்தை ஞாயிற்றுக்கிழமை (18) மாலை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம், பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .