Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 ஜனவரி 21 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியாவில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் பெண்கள் இருவர், சனிக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிப்படைந்த யுவதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கழிவு நீர்மற்றும் வெள்ள நீர் என்பன வீதியில் உள்ள வாய்கால் ஊடாக செல்வது தொடர்பில் அப் பகுதியில் உள்ள இரு வீட்டாரிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.
குறித்த பகுதி வடிகாலமைப்பு சீரற்ற நிலையில் காணப்படுவதாலும், அனுமதியற்ற கட்டிடங்களின் காரணமாகவும் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு, குறித்த வீட்டாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதும் பிரதேச சபையால் அவை தீர்த்து வைக்கப்படவில்லை.
இந்நிலையில், குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கழிவு நீர் வீதி வாய்கால் ஊடாக இன்னுமொரு வீட்டை அண்மித்து சென்றுள்ளது. கழிவு நீரை வீதிக்கு விட்ட வீட்டாருடன் அயல் வீட்டில் வசிக்கும் யுவதி ஒருவர் முரண்பட்டுள்ளார். இதன்போது இரு வீட்டாருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அது கைகலப்பாக மாறவே, குறித்த யுவதி மீது இரு பெண்கள் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் காயமடைந்த 22 வயதான யுவதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய தாக்குதல் மேற்கொண்டதாக 30 மற்றும் 25 வயதுடைய சகோதரிகளான இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வவுனியாவில் அரச திணைக்களம் ஒன்றில் உத்தியோகத்தராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள பல வீதிகளில் வடிகாலமைப்பு சீர்செய்யப்படாத நிலை காணப்படுவதுடன், மழை காரணமாக பல வீடுகள் வெள்ளத்தினால் பாதிப்படைந்த போதும் வவுனியா தெற்கு பிரதேச சபை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்காது அசமந்த போக்குடன் செயற்பட்டு வருகின்றமையே இவ்வாறான சச்கரவுகள் ஏற்பட வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
35 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago