2025 மே 05, திங்கட்கிழமை

வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலய விவகாரம்

Freelancer   / 2022 ஜூலை 10 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - வட்டுவாகல், சப்தகன்னியர் ஆலய விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக இராணுவத்தினர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அன்ரனி ஜெயநாதனன பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரை மீண்டும் முல்லைத்தீவுப் பொலிஸார் அழைத்திருந்தனர்.

குறித்த விசாரணையின்போது தீர்த்தம் எடுப்பதற்காக பயன்படுத்தும் வீதி மற்றும், சப்தகன்னியர் ஆலயத்தின் வருடாந்த பொங்கலின் இறுதிப்பூசை இடம்பெறும் இடம் என்பவற்றை ஆலய நிர்வாகம் பயன்படுத்துவதற்கு இராணுவத்தினர் மறுப்புத் தெரிவித்திருந்தனர்.

எனவே ஆலயத்திற்குரிய காணிக்குள் இராணுவத்தினர் கட்டடம் அமைத்து பாதுகாப்புக் கடமைகளை மேற்கொண்ட இடத்தை இராணுவத்திற்கு மீள வளங்கமுடியாதென கோவில் நிர்வாகத்தினரும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இந்த விவகாரத்தை விரைவுபடுத்தி  நீநிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரை சப்தகன்னியர் ஆலய நிர்வாகத்தினர் கோரியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இராணுவத்தினர், ஆலய நிர்வாகத்தினர், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அன்ரனிஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரை மீண்டும் விசாணைக்கென முல்லைத்தீவு பொலிஸார் அழைத்திருந்தனர்.

தமது காணியில் இராணுவத்தினர் இருப்பதற்கு அனுமதிக்கமுடியாதென கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்ததுடன், தீர்த்தம் எடுக்கப் பயன்படுத்தும் பாரம்பரிய வீதியை தம்மாலும் விடமுடியாதெனவும், வருடாந்தப் பொங்கலின் இறுதிப்பூசை இடம்பெறும் இடத்தையும் வடமுடியாது எனவும் இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த விடயத்தை நீதிமன்றில் பாரப்படுத்துமாறு பொலிஸாரிடம் ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X