2025 மே 05, திங்கட்கிழமை

வதந்தியை நம்பி குவிந்த மக்கள்

Freelancer   / 2022 ஜூன் 08 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெம்பர்ட்

நள்ளிரவு முதல் மீண்டும் பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக வெளியான செய்தியைத்  தொடர்ந்து, மன்னாரில் எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு முன்னால் பாரிய மக்கள் கூட்டம் கூடியுள்ளது.

இவர்கள் நேற்று மதியம் முதல் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, மன்னாரில் லிட்றோ எரிவாயு விநியோகம் கடந்த பல நாட்களுக்கு முன்னர் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் பல முகவர்கள் ஊடாக பல நூற்றுக்கணக்கான எரிவாயு சிலிண்டர்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

எனினும், மன்னார் மாவட்டத்தில் ஒரு தடவை மாத்திரமே எரிவாயு வினியோகிக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக உயர் அதிகாரிகள் அசமந்த போக்குடன் நடந்து கொள்வதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X