2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் போராட்டத்துக்கு முஸ்தீபு

Editorial   / 2020 ஜனவரி 26 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன் 

வடக்கு - கிழக்கு ஆகிய மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் சங்கத்தினரால், ஜனவரி 30ஆம் திகதியன்று, மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்ப டவுள்ளதாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். 

 வவுனியாவில், இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். 

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர்கள், ஜனவரி 30ஆம் திகதியன்று, முற்பகல் 10 மணிக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரிய பேரணி ஒன்றை, வவுனியா பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறினர். 

 குறித்த போராட்டத்துக்கு அனைவரும் கட்சி பேதமின்றி அணிதிரண்டு, உங்கள் ஆதரவையும் பங்களிப்பையும் நல்குமாறும், அவர்கள் கேட்டுக்கொண்டனர். 

 தாம் எந்த அரசியல்வாதிகளுக்கு பின்னாலோ கட்சிகளுக்கு பின்னாலோ இருந்து செயற்படவில்லையெனத் தெரிவித்த அவர்கள், தாங்கள் நிவாரணத்தை தேடியோ, மரணச் சான்றிதழைக் கேட்டோ போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை எனவும் கூறினர். 

தமிழ் அரசியல்வாதிகள் தமது விடயத்தில் அக்கறையாகச் செயற்படவில்லையெனச் சாடிய அவர்கள், தம்மை வைத்து அவர்கள் எதுவும் செய்யலாம் என்பதே அவர்களது நோக்கமாகுமெனவும் குற்றஞ்சாட்டினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .