2025 மே 05, திங்கட்கிழமை

வவுனியாவில் இளம் யுவதி கைது

Freelancer   / 2022 ஜூலை 13 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன் 

வவுனியா - புளியங்குளம் பகுதியில் நேற்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு மேற்கொண்ட குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்தை புளியங்குளம் பகுதியில் வைத்து யுவதி ஒருவர் வழிமறித்த போதும் பேருந்து நிறுத்தப்படவில்லை. 

இதன் காரணமாக ஆத்திரமடைந்த யுவதி பேருந்து மீது கல் வீச்சு மேற்கொண்டுள்ளார். இதனால் பேருந்தின் கண்ணாடி நொருங்கியுள்ளது.

இதனையடுத்து பேருந்து சாரதி மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரி நகரில் வசிக்கும் 28 வயது பெண் ஒருவரை கைது செய்து மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக மேலும் தெரிவித்தனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X