2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் கொடிதினம் அனுஷ்டிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம்,  வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று அனுஷ்டிக்கபட்டது.

இந்து சமய அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்ததை உணர்த்தும் விதமாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இம்மாதம் 1ஆம் திகதி முதல் 30ஆம் திகதி  வரை நாடு முழுவதும் இந்து சமய அறநெறி கல்வி கொடிதினத்தை  அனுஸ்டிப்பதற்கு தீர்மானித்துள்ளது. 

அந்தவகையில், குறித்த நிகழ்வு இன்றயதினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் உதவி மாவட்ட செயலாளர் நா,கமலதாஸ் தலைமையில் நடைபெற்றது. 

குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட  அனைவருக்கும் அறநெறி கொடிகள் வழங்கிவைக்கப்பட்டன.

நிகழ்வில் முதன்மை அதிதியாக  கலந்துகொண்ட வவுனியா மாவட்டச் செயலர் எம்.ஹனீபா, அறநெறி கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக உரையாற்றியிருந்தார். 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X