Editorial / 2023 டிசெம்பர் 07 , பி.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, பரந்தன் பிரதான வீதியில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் பிரதான வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே பாதையில் பயணித்த பட்டாரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 22 மதிக்கத்தக்க இளைஞன் படுகாயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிள் வாகனத்திற்குள் புகுந்து கடும் சேதத்துக்கு உள்ளாகியது.
குறித்த இளைஞன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
18 Feb 2026
18 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
18 Feb 2026
18 Feb 2026