Freelancer / 2023 பெப்ரவரி 26 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

லெம்பர்ட்
'வாழும் போதே வாழ்த்துவோம்' தேசிய ரீதியில் 25 மாவட்டங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட கலைஞர்களுக்கும் கலாசாரத்தை மேம்படுத்த உழைத்தவர்களுக்குமான 4ஆவது தேசிய கலா விபூஷணம் 'உலகத் தமிழர் விருது வழங்கும் விழா', மன்னார் பிரதேச செயலகப் பிரிவு, பேசாலை சங்கவி பட மாளிகையில் நேற்று (25) நடைபெற்றது.
இதில் 25 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள் மற்றும் கலாசாரத்தை மேம்படுத்த உழைத்தவர்கள் என 180 கலைத்துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.
இதேவேளை, சிறப்பான முறையில் கலையை முன்னெடுத்துச் செல்லும் நபர்களுக்கும் நடிகர்கள் மற்றும் பாடல் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த கலைஞர்களுக்கும் சான்றிதழ் வழங்கி, பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.
கலாநிதி துரைராசா சுரேஷ் சங்கவி பிலிம்ஸ் சங்கவி தியேட்டர் உரிமையாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக புனித வெற்றி நாயகி ஆலயம் பேசாலை பங்குத் தந்தையும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவருமான வண. ஏ ஞானப்பிரகாசம் அடிகளார், புரவலர் ஹாசிம் உமர் உட்பட மதத் தலைவர்கள் கலந்துகொண்டு விருதுகளையும் கௌரவத்தையும் வழங்கிவைத்தனர். (N)
16 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
28 minute ago
35 minute ago