Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில், இன்று (16) காலை, பொதிசெய்யப்பட்டு, புதைக்கபட்டிருந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகள், சீரூடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
முள்ளியவாய்க்கால் பகுதியில், தனியார் ஒருவர் தனது காணியை கனரக இயந்திரம் கொண்டு துப்புரவு செய்த போது, நிலத்தில் புதைந்திருந்த நிலையில் காணப்பட்ட பையை எடுத்து, அதை பார்த்த போது, அதிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகள் இருந்துள்ளன.
இது தொர்பில், காணி உரிமையாளர் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு புலிக் கொடிகளையும் 2 இராணுவ சீருடைகளையும் இரண்டு தொப்பிகளையும் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இராணுவச் சீருடைகளில் ஒன்று, சிறுவர் ஒருவரின் அளவில் காணப்பட்டது.
மீட்கப்ட்ட கொடிகளும் உடைகளும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில், நாளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
8 hours ago