Niroshini / 2021 டிசெம்பர் 06 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - பரந்தன் பகுதியில், இன்று (06) காலை 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பூநகரி வீதியில் இருந்து ஏ9 வீதிக்கு பயணித்த மோட்டார் சைக்கிள், ஏ9 வீதியில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் மோதியுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளை விலத்த முற்பட்ட டிப்பரின் ஒரு பகுதி, மோட்டார் சைக்கிளின் கான்ரில் பகுதியில் கொழுவி இழுத்து செல்லப்பட்ட நிலையில்,மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.
கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியை சேர்ந்த தேனுயன் (வயது 20), பிலங்கர் (வயது 22) ஆகிய இளைஞர்களே, குறித்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணையை, கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
29 minute ago
33 minute ago
46 minute ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
33 minute ago
46 minute ago
10 Nov 2025