Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 18 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள், இவ்வருடத்துக்குள் பூர்த்தி செய்யப்படுமென, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, தொலைத்தொடர்பு, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ உறுதியளித்தார்.
கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் பயிற்சி தடாகம் மற்றும் உள்ளக விளையாட்டரங்கம் என்பவற்றை நேற்று (17) திறந்து வைத்த பின்னர் , ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறு உறுதியளித்தார்.
இந்த உத்தரவாதம், கிளிநொச்சி விளையாட்டு மைதானம் தொடர்பில் வழங்கப்பட்ட 4ஆவது உத்தரவாதமாகும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தின் போது, குறித்த விளையாட்டு மைதானத்துக்கான அடிக்கல்லை நாட்டிவைத்த போது, இன்னும் ஒரு சில வருடங்களில், மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் நிறைவுறுமென, மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். ஆனால், அபிவிருத்திப் பணிகள் எதுவும் முன்னெடுக்கப்பட்டவில்லை.
இதன் பின்னர், 2015ஆம் ஆண்டில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், 2016ஆம் ஆண்டில், அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த தயாசிறி தயாகமகேவும் இந்த மைதானம் புனரமைக்கப்படுமென அறிவித்திருந்தபோதும், அதுவும் நடைபெறவில்லை.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (17) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, இவ்வருடத்துக்குள் மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் அனைத்தும் நிறைவுக்கு கொண்டுவரப்படுமென உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025