Freelancer / 2022 ஜூன் 29 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்டத்தில் வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கையினை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான கால கட்டத்தில் உணவு தட்டுப்பாட்டில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு விவசாய முயற்சிகள் கூடுதலாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் வீட்டுத் தோட்டங்களில் பொது மக்கள் கூடுதலாக ஈடுபட வேண்டும் என மாவட்டச் செயலகம், பிரதேச செயலகங்களில் நடைபெறுகின்ற கூட்டங்களில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், விவசாயத் திணைக்களம் ஊடாக வீட்டுத் தோட்டத்திற்கான விதைகள் அதிகாரிகளினால் வழங்கப்படுகின்றன.
இதேவேளை கிளிநொச்சி மாவட்ட கமநல சேவை நிலையங்களில் தற்போதும் உள்ள இரசாயன உரங்களை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கிளிநொச்சி மாவட்டச் செயலாளரிடம் விவசாயிகளினால் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
குறிப்பாக வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கைக்கு குறித்த உரங்களை பகிர்ந்தளிக்க வேண்டும் என கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் மேட்டுப் பயிர்ச் செய்கை திட்டங்களான கனகாம்பிகைக்குளம், பிரமந்தனாறு, கண்ணகைபுரம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் கூடுதலாக உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றனர். (R)
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026