Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 23 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவின் இரட்டைவாய்க்கால் தொடக்கம் சாலை வரையான வீதியை முழுமையாக புனரமைக்குமாறு, பொதுமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருவதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, போர் நிறைவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் போர் காலத்தில் பாதுகாப்பு வலயங்களாக விளங்கிய இரட்டைவாய்க்கால், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை, மாத்தளன் உள்ளடக்கிய சாலை வரையான பதின்மூன்று கிலோமீற்றர் வீதி முழுமையாகப் புனரமைக்கப்படவில்லை.
நானும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமாகிய ஆ.புவனேஸ்வரனும் இணைந்து மாகாண சபை நிதியில் ஒரு கோடியில் இரட்டைவாய்க்காலில் இருந்து ஒரு கிலோமீற்றர் வீதியினைப் புனரமைத்திருந்தோம்.
வீதி அபிவிருத்தித் திணைக்களமும் குறித்த வீதியில் சில மதகுகளை அமைத்துள்ளது. இப்பகுதியில் வாழ்கின்ற 450 வரையான குடும்பங்கள் வீதிப் புனரமைக்கப்படாததன் காரணமாக பஸ் சேவைகள் இடம் பெறுவதில்லை.
இதன் காரணமாக போக்குவரத்து நெருக்கடிகளை மேற்படி குடும்பங்கள் எதிர்கொண்டுள்ளன. முல்லைத்தீவு நகரத்திற்கும் புதுக்குடியிருப்பு நகரத்திற்கும் இப்பகுதி மக்கள் செல்வதில் நெருக்கடி நிலைமை காணப்படுகின்றது. கடலில் பிடிக்கப்படும் கடல் உணவுகளை முல்லைத்தீவு நகரத்திற்குக் கொண்டு வருவதில் சிரமங்கள் காணப்படுகின்றன.
பொதுவாக கடந்த பத்தாண்டுகளில் மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய பகுதிகளின் மக்கள் கடுமையான போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
30 minute ago
55 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
55 minute ago
2 hours ago
3 hours ago