2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வீ.ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கை

Freelancer   / 2022 ஜூலை 10 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் 33ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் செயலாளருமான வீ.ஆனந்தசங்கரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“1970ம் ஆண்டுக்கு முன்பு நானும் அமரர் அ. அமிர்தலிங்கம் அவர்களும் வெவ்வேறு கட்சிகளை
சேர்ந்தவர்களே. 1970ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் தோற்கடிக்கப்பட
நாமும் காரணமாய் இருந்தோம். அன்னாரின் பரம விரோதியாக அரசியலில் இருந்த அமரர்
ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் தானே தோல்வியுற்றிருந்த வேளையிலும் அமரர் அமிர்தலிங்கம்
அவர்களின் தோல்வி தமிழினத்திற்கு ஏற்பட்ட ஒரு பெரும் இழப்பென கூறியதன் மூலம் அமரர்
அமிர்தலிங்கம் அவர்களின் மதிப்பிட முடியாத பெறுமதியை வெளிப்படுத்தினார்.

நான் திரு. அமிர்தலிங்கம் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொள்ளாதவன் அல்ல. ஆனால் அவை அனைத்தும் உள்வீட்டுப் பிரச்சனையே அன்றி வெளியுலகிற்கு வரவில்லை. கிளிநொச்சியை தனிமாவட்டமாக ஆக்குவதில் எம்மிடையே கருத்து வேறுபாடு இருந்தபோதும் கடைசிக் காலத்தில் கிளிநொச்சி மாவட்டம் இன்றைய சூழ்நிலைக்கு சாதகமாக அமைந்துள்ளது எனவும் பாராட்டியுள்ளார். 

1974ம் ஆண்டு வட்டுக்கோட்டை மகாநாட்டில் அமரர் தந்தை செல்வா அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அமரர் தொண்டமான் ஆகியோர் புதிதாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கூட்டுத் தலைவர்களாகவும் அமிர் அவர்கள் செயலாளர் நாயகமாகவும் ஏகமனதாக தெரிவானார்கள். அமரர் ஜீ.ஜீஅவர்கள் தலைவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உயிருடன் இருந்தும் தலைவர் பதவியை தான் ஏற்கவில்லை என்று ஒரு சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை. 

தந்தை செல்வா  தலைவர்கள் அமிர் சிவா போன்றவர்களுடன் ஏக காலத்தில் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவன். அவர்களுடன் பலதரப்பட்ட கட்சிப் பணிகளில் ரூடவ்டுபட்டவன். 

சத்தியாக்கிரகங்கள் உண்ணாவிரதங்கள் சமபந்தி போசனங்கள் கிராம யாத்திரைகள் போன்ற பல்வேறு
நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவன் என்ற முறையில் நான் பெருமைப்பட நியாயமுண்டு.

அமிர் அவர்கள் அமரத்துவம் அடைவதற்கு சில நாட்களுக்கு முன்பு நான் அவருடன் பிரயாணம் செய்து
சென்னையில் அவரை விட்டு பிரியும் போது அதுதான் நமது இறுதி சந்திப்பு என நான் கனவிலும் எண்ணவில்லை.

நாம் பிரியும் போது அன்னார் எனக்கு கூறியது இன்றும் என் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கும்
வார்த்தைகள். 'சங்கரி எம்மை எது காத்திருக்கிறது என்பதை நாம் அறிவோம் இருப்பினும் எம்மில் சிலர்
அதற்கு முகம் கொடுத்துதான் ஆக வேண்டும்' என்றார். அவரது இறுதி வார்த்தைகள் அவரின் தீர்க்க தரிசனமாகவே அமைந்தது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .