2025 ஜூலை 09, புதன்கிழமை

வாழ்வாதராமின்றி துன்பப்படுவதாக பிரம்படி மக்கள் தெரிவிப்பு

George   / 2017 ஜனவரி 06 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு கேப்பாபுலவில் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பிரம்படி கிராமத்தில் 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதும் தமக்கு இதுவரை எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு கரைதுரைபற்று பிரதேச செயலத்திற்குட்பட்ட கேப்பாபுலவு – பிரம்படி கிராமத்தில் வாழ்ந்துவந்த மக்கள், 2008ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தனர்.

பின்னர் 2012ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மாதிரிக் கிராமத்தில் குடியேற்றப்பட்ட அம்மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்த நிலையில் 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மீண்டும் மீள்குடியேற்றப்பட்டனர்.

2012ஆம் ஆண்டு கேப்பாபுலவில் மீள்குடியேற்றம் செய்வதாக தெரிவித்து தம்மை அழைத்து வந்து சூரிபுரம் மாதிரிக்கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்ட தாம் பல்வேறு துன்பங்களை அனுபவித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் தாம் கொடுத்த நெருக்கடிகள் காரணமாக 2016 ஆம் ஆண்டு மாசி மாதம் 16 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது தமது தோட்டக்கிணறுகளை இராணுவத்தினர் இடித்து தரைமட்டமாக்கி சென்றுள்ளதாகவும் குடிதண்ணீரை பெற்றுக்கொள்வதிலும் சிரமங்களை எதிர் நோக்கி வருவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த கிராமத்தில் 16 குடும்பங்களில் 5 குடும்பங்கள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் எனவும், தற்காலிக வீடுகள் கூட இதுவரை தமக்கு வழங்கி வைக்கவில்லை எனவும் போக்குவரத்து வசதிகள் கூட இல்லை என தெரிவிக்கும் மக்கள் காட்டுப்பாதைகள் ஊடாக யணம் செய்வதற்கு அச்சமாகவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .