Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் நெற்பயிர்ச்செய்கையில் மட்டும் அக்கறை காட்டாது அனைத்துப் பயிர்களையும் உற்பத்தி செய்பவர்களாக மாறவேண்டுமென கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் வியாழக்கிழமை (15) நடைபெற்ற விவசாயக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் ஒரு பயிர்ச்செய்கையை மட்டும் நம்பியிருக்காது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பல்வேறு பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ள வேண்டும். தரிசு நிலங்களை பயிர்ச்செய்கை நிலங்களாக மாற்றவேண்டும். உற்பத்தித் திறன்கள் அதிகரிக்கப்பட்டு ஏற்றுமதிக்குரியவர்களாக மாறவேண்டும். நெல்லுற்பத்தியில் மட்டுமல்லாது கரும்பு, தெங்கு, மற்றும் பழச்செய்கைகளிலும் விவசாயிகள் கூடுதலாக ஈடுபடவேண்டும். இதன்மூலமாகவே கிளிநொச்சி மாவட்டம் விவசாய மாவட்டம் என்ற பெயரிற்கேற்ப முன்னேறமுடியும்' என்றார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago