Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதே செயலர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் முன்னெடுத்து வரும் உண்ணாவிரத போராட்டம், நேற்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் தாய் மற்றும் தந்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமக்கு 7 வருடங்களாக அதிகாரிகளினால் அநீதி இளைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தும் குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் அலுவலரும் ஒரு பக்க சார்பாக செயற்படுவதாக தெரிவித்தும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் 1983ஆம் ஆண்டு முதல் வாழ்ந்து வருவதாகவும் தமது காணியை பிறிதொரு நபர் உரிமை கோரி வந்த நிலையில் காணி பிணக்கு 7 வருடமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கும் குறித்த குடும்பத்தினர் நேற்று வரை தமக்கான நீதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.
தாம் 7 வருடமாக எவ்வித பாதுகாப்புமற்ற தற்காலிக கொட்டகையிலேயே வசித்து வருவதாகவும் தமக்கு மலசல கூடம், வீட்டு திட்டம் உட்பட எவ்வித அரச உதவிகளையும் கிராம சேவையாளர் தருவதில்லை எனவும் குறித்த குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், நீதிமன்று ஒன்றில் வழக்கொன்று இடம்பெற்று கொண்டிருக்கையில், அரச அதிகாரிகள் பக்க சார்பாக செயற்படுகின்றமை பக்க சார்பான செயற்பாடாகவே தாம் கருதுவதாகவும் இதற்கு அரச உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எம்மை போன்று வேறு எவரும் பாதிக்கப்படாதவாறு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago