Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2016 நவம்பர் 20 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு, கரைதுறைபற்றின் மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய கிராமங்களில் மீளக்குடியமர்ந்துள்ள மக்கள், தங்களுடைய கிராமத்துக்கான அடிப்படை வசதிகளை உருவாக்குமாறு, மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தங்களுடைய கிராமங்கள், இறுதிப்போர்க் காலத்தின்போது பேரழிவைக் கண்டதாகவும் மீள்குடியேற்றத்தின் பின்னர், தங்களுடைய கிராமங்களுக்கான பஸ் சேவைகள் இடம்பெறவில்லை. மருத்துவமனை இயங்கவில்லை. இதனால், முல்லைத்தீவுக்கும் புதுக்குடியிருப்புக்கும் செல்ல வேண்டிய நிலையில் உள்ளதாகவும், கிராமத்தின் மருத்துவம், போக்குவரத்துக்கு கு வழியேற்படுத்தும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறிப்பாக, கடலில் பிடிக்கப்படுகின்ற கடலுணவுகளை, சேதமடைந்த வீதி வழியாக முல்லைத்தீவு நகரத்துக்கு எடுத்துச்செல்வதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் உயர்தர வகுப்புக்கான மாணவர்கள், முல்லைத்தீவு நகரத்துக்;கும் புதுக்குடியிருப்பு நகரத்துக்கும் சென்று வருவதில், பஸ் சேவையின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கிராமத்தின் மருத்துவமனை இயங்காததன் காரணமாக, முல்லைத்தீவுக்;கும் புதுக்குடியிருப்புக்கும் நோயாளர்கள் செல்ல வேண்டியுள்ளதாகவும், 1990இற்கு முன்னர், பஸ் சேவைகள் இக்கிராமங்களுக்கு இடம்பெற்றது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோன்று, தற்போதும் பஸ் சேவையினை பணியில் ஈடுபடுத்தவும். அத்துடன், கிராமத்தின் மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவரை நியமிக்கவும். இது தொடர்பாக, வடமாகாண முதலமைச்சர், வடமாகாண சுகாதார அமைச்சர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு மனுக்கள் மூலமும் நேரடியாகத் தெரியப்படுத்தியும், இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும், இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
41 minute ago
2 hours ago
2 hours ago